சாஸ்தா காயத்ரீ

ஓம் பூத நாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹி தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்

ஓம் தத் புருஷாய வித் மஹே பூத நாதாய தீ மஹி தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்

Thursday, October 31, 2013

உழவாரப்பணி

mwpKfr; nra;jpfs;

“ Ntz;Ljy; Ntz;lhik ,yhd;mb Nrh;e;;;jhh;f;F
Ahz;Lk; ,Lk;ig ,y.”
tpUg;G> ntWg;G ,y;yhj flTspd; jpUtbfis epidg;gth;fSf;F vg;NghJk; Jd;gk; ,y;iy vd;w jpUts;Sthpd; jpUthf;Fg;gbAk;
“ XOf;fj;J ePj;jhh; ngUik tpOg;gj;J
Ntz;Lk; gDty; JzpT .“
ey;nyhOf;f newpapy; epd;W cyfg;gw;Wfis Jwe;jth;fspd; ngUikNa > Áy;fs; rpwe;jg; ngUikahf tpUk;gpf;$Wk; vd;w Fwspd; gbAk; Md;kpf kw;Wk; ey;nyhOf;f rPyh;fsh fTk; > jq;fs; ehl;by; tsj;ijg; ngUf;fp mth;fspd; kdij XUepiyg;gLj;jp jq;fs; ehl;il rpwg;ghf Ml;rp nra;tjw;fhf kd;dh;fshy; cUthf;fg;gl;lJ jhd; Nfhapy;fs;.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
vd;w mUl;gpufhr ts;syhhpd; kdk; jpwe;j Ntz;LNfhis Kd;Ng mwpe;j Md;kPfg; nghpath;fis itj;J kd;dh;fs; gy nrw;nghopTfs; kw;Wk; fiy epfo;rpfis Vw;gLj;jp kf;f spilNa ey;nyz;zq;fis tsh;j;J ngha; $whik > jpUl;L kw;Wk; gy Njitaw;wr; nray; fis jLg;gjw;fhfTk; jq;fspd; vz;zq;fs; epiwNtwTk; tpUk;gpa flTspd; rpiyNa jj;JU tkhf tbj;J Nfhapy;fis cUthf;fp kf;fs; kw;Wk; jq;fspd; ey;yhl;rpf;Fk; gad;gLj;jpdh;.
kd;dh;fspd; Ml;rp khw;wj;jpdhy; gy Nfhapy;fs; guhkupg;G ,d;wpAk; > me;epah;fspd; gjtp ntwpahYk; gy Nfhapy;fs; ,bf;fg;gl;Lk; mopAk; jUthapy; cs;sd. ,g;NghJ Ml;rpahsh; fshy; tUkhdk; cs;s Nfhapy; kl;LNk guhkhpf;fg;gLfpwJ. Mjprapf;fj;jf;f tifapy; gy Ntiyg;ghLs;s epiwa Nfhapy;fs; rPuope;J nfhz;Ljhd; ,Uf;fpd;wd.
        தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
            செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
        போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
            போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
        ஏகசிவானந்த வாழ்க்கையில் என்றும்
            இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
        ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
            அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
Njfk; mopahky; ey;;y epiyapy; ,Ue;jhy; kl;LNk gy rpj;jpfisg; gw;wp ehk; nra;Ak; nray;fs; ahTk; rpwg;Gld; nray; gl KbAk;. mJNghyNt Nfhapy;fs; rpwg;ghf rpijtilahky; ,Ue;jhy; kl;LNk kf;fs; topg;gl;L nra;Ak; nray;fs; ahTk; rpwg;Gld;  mika top fpilf;Fk; vd;gij czh;e;j rka Futuhd jpUehTf;fuR vd;w miof;fg;gLk; mg;gh; vd;w rka nghpathuhy; rpwpajhf Muk;gpf;fg;gl;l Nfhapy; rPh; mikg;G gzpNa csthwg; gzp MFk;
csk; + MWk; + gzp = cothug;gzp
mwptpay; nfhs;if gb kdpjh;fspd; vz;zq;fis fhe;j miyfs; jPh;khzpf;Fk; vd;w nfhs;;ifia Kd;Ng mwpe;j rpwe;j jkpo; kf;fshy; fhe;j miyfs; cUthf;Fk; gb mikf;fg; gl;l Nfhapy;fspy; cs;sd;Gld; Ntiy nra;jhy; kdjpy; cs;s ftiyfs; khWk; vd;gNj MFk;.  
         jkpofj;jpy; Ml;rpahsh;fshy; ftdpf;fg;glhj gy rpijAk; jUthapy; cs;sf; Nfhapy;fis
“ ,d;gk; tpioahd; tpidtpiothd; jd;Nfsph;
Jd;gk; Jilj;Àd;Wk; Àz;. “
jdf;F ,d;gk; Vw;glhtpl;lhYk; jhk; nra;Ak; nrayhy; jd; Rw;wj;jhh; Kjy; AhtUk; gyd; ngWjy; Ntz;Lk; vd;w vz;zk; nfhz;l mbahh;fshy; ,d;W gy Nfhapy;fis rPh; mikf;Fk; cothug;gzp jkpof;fj;jpy; eilg;ngw;W tUfpwJ. njd; jkpofj;jpy; fd;dpahFkhp> jpUney;Ntyp kw;Wk; Àj;Jf;Fb khtl;lq;fspy; rpwg;ghf eilg;ngw;W tUfpwJ.

Friday, October 18, 2013

சிந்தனை துளி

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன்,
இறந்தவனுக்கு ஒப்பாவான்.               -      விவேகானந்தர்

            மனிதர்களின் உடலில் வரும் பலநோய்களுக்கு அவர்களின் மூச்சு விடும் முறையும் முக்கிய காரணியாக அமைகிறது. உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்  ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)
            ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடி-னால் ஆயுள் குறையும்.
            ஒரு ஜென் துறவியிடம் சீடன் ஒருவன் ஜென்  தத்துவங்கள் கற்று வந்தான். அவனுக்கு கற்பனைகள் அதிகம். அநேகமாக  இன்று கற்றுக்  கொடுத்த தியானத்தை செய்தால், நமது குருவின் திறமையில் பாதி கிடைத்துவிடும். அட! அது வேண்டாம். இதைவிட முக்கியமான ஒரு தியானம் இருக்கிறதே. அதைச் செய்தால், நிறைய பலன் கிடைக்குமே? அளவு  கடந்த கற்பனையில் இருந்த சீடன், வழியில் நின்றபடி, தியானம் செய்ய ஆரம்பித்தான். நான் புத்தராக மாறுகிறேன். மாறிக்கொண்டே இருக்கிறேன்..! அப்போது அந்த வழியில் வந்த துறவிக்கு, தனது சீடனின் செய்கை வியப்பை அளித்தது. சீடன் நீண்ட நேரம் கழித்து கண்விழித்தான். தன் அருகே குரு காத்திருப்பதைக் கண்டு வியந்தான்.  குருவே! தங்களை வணங்குகிறேன். ஆமாம் வழியில் ஏன்தியானம் செய்து கொண்டிருக்கிறாய்? குருவே! எனக்கு புத்தராக மாற வேண்டுமென்று ஆசை. அதனால் தான் கடுமையாக தியானம் செய்தேன். உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்குமே!  ஜென் துறவி எதுவும் பேசவில்லை. கீழே கிடந்த கல்லை எடுத்து தூக்கி போட்டு பிடிக்க ஆரம்பித்தார். ஆமாம் என்ன செய்கிறீர்கள்? இந்த கல்லை தூக்கிப் போட்டு வைரமாக் மாற்றப் போகிறேன்.இதென்ன விந்தையாக் இருக்கிறது? எவ்வளவு முறை கல்லை தூக்கிப் போட்டு பிடித்தாலும், அது வைரமாக மாறாதே? நீண்ட நேரம் தியானம் செய்பவன், புத்தராக மாறும் போது, இந்த கல் வைரமாக மாறாதா? சீடனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தனது தவறும் அவனுக்கு புரியத் தொடங்கியது.
தியானம் என்பது கடுமையான உழைப்பல்ல. ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து செய்வது தான் தியானம்.
முன்னோர்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கையாண்ட ஓர் அறிவியல் கலையே யோகக்கலை. யோகம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் 'யுஞ்" என்ற சொல்லிலிருந்து பிறந்தது. இதற்கு ஒருங்கிணைத்தல் அல்லது எல்லாவற்றையும் ஒரு மையத்தில் குவித்தல் என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால்  அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயன்முறை என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். 


சுதந்திரமானவனாக இரு. 
எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. 
நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்துகால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்  வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத் தான் இருக்கும். மக்கள் எவராயினும் சகிப்புத்தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும். நீ கடவுளைத்தேடி எங்கும்போகவேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க் கூடாது? பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப் பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் தத்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

திருஅருட்பிரகாச வள்ளலார்

ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.



திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,




             பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
             நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே


என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,            தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
            பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
            மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
            எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே
ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.
ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.


நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவேவான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே
ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும்.  ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக!

திருவருட்பா

                                            முதல் திருமுறை / First Thirumurai
                                                  001. திருவடிப் புகழ்ச்சி

                    இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்                               
                    றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல                        
                    வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து                        
                     சும்மா இருக்கும் சுகம்                         
 
                                                   தெய்வமணி மாலை
 
       திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
                           திறலோங்கு செல்வம்ஓங்கச்                                                             
      செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்                                                      
                          திகழ்ந்தோங்க அருள்கொடுத்து                            
      மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க                     
                        வளர்கருணை மயம்ஓங்கிஓர்                         
      வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த                        
                        வடிவாகி ஓங்கிஞான                         
      உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்                         
                        ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்                        
      உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க                        
                        உய்கின்ற நாள்எந்தநாள்                        
     தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்                        
                        தலம்ஓங்கு கந்தவேளே                        
     தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி                        
                        சண்முகத் தெய்வமணியே

Tuesday, July 23, 2013

சிவ புராணம்

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்

1. சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5



வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க 10


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி 15 



ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான். 20



கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், 
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25



புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் 30 



எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35



வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 



ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே 45 



கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியர் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50



மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 



தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 



பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதர் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 



அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வர் தம்கருத்தின் 75



நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 



மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனர்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90



அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


திருச்சிற்றம்பலம்