சாஸ்தா காயத்ரீ

ஓம் பூத நாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹி தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்

ஓம் தத் புருஷாய வித் மஹே பூத நாதாய தீ மஹி தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்

Friday, October 18, 2013

சிந்தனை துளி

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன்,
இறந்தவனுக்கு ஒப்பாவான்.               -      விவேகானந்தர்

            மனிதர்களின் உடலில் வரும் பலநோய்களுக்கு அவர்களின் மூச்சு விடும் முறையும் முக்கிய காரணியாக அமைகிறது. உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்  ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)
            ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடி-னால் ஆயுள் குறையும்.
            ஒரு ஜென் துறவியிடம் சீடன் ஒருவன் ஜென்  தத்துவங்கள் கற்று வந்தான். அவனுக்கு கற்பனைகள் அதிகம். அநேகமாக  இன்று கற்றுக்  கொடுத்த தியானத்தை செய்தால், நமது குருவின் திறமையில் பாதி கிடைத்துவிடும். அட! அது வேண்டாம். இதைவிட முக்கியமான ஒரு தியானம் இருக்கிறதே. அதைச் செய்தால், நிறைய பலன் கிடைக்குமே? அளவு  கடந்த கற்பனையில் இருந்த சீடன், வழியில் நின்றபடி, தியானம் செய்ய ஆரம்பித்தான். நான் புத்தராக மாறுகிறேன். மாறிக்கொண்டே இருக்கிறேன்..! அப்போது அந்த வழியில் வந்த துறவிக்கு, தனது சீடனின் செய்கை வியப்பை அளித்தது. சீடன் நீண்ட நேரம் கழித்து கண்விழித்தான். தன் அருகே குரு காத்திருப்பதைக் கண்டு வியந்தான்.  குருவே! தங்களை வணங்குகிறேன். ஆமாம் வழியில் ஏன்தியானம் செய்து கொண்டிருக்கிறாய்? குருவே! எனக்கு புத்தராக மாற வேண்டுமென்று ஆசை. அதனால் தான் கடுமையாக தியானம் செய்தேன். உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்குமே!  ஜென் துறவி எதுவும் பேசவில்லை. கீழே கிடந்த கல்லை எடுத்து தூக்கி போட்டு பிடிக்க ஆரம்பித்தார். ஆமாம் என்ன செய்கிறீர்கள்? இந்த கல்லை தூக்கிப் போட்டு வைரமாக் மாற்றப் போகிறேன்.இதென்ன விந்தையாக் இருக்கிறது? எவ்வளவு முறை கல்லை தூக்கிப் போட்டு பிடித்தாலும், அது வைரமாக மாறாதே? நீண்ட நேரம் தியானம் செய்பவன், புத்தராக மாறும் போது, இந்த கல் வைரமாக மாறாதா? சீடனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தனது தவறும் அவனுக்கு புரியத் தொடங்கியது.
தியானம் என்பது கடுமையான உழைப்பல்ல. ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து செய்வது தான் தியானம்.
முன்னோர்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கையாண்ட ஓர் அறிவியல் கலையே யோகக்கலை. யோகம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் 'யுஞ்" என்ற சொல்லிலிருந்து பிறந்தது. இதற்கு ஒருங்கிணைத்தல் அல்லது எல்லாவற்றையும் ஒரு மையத்தில் குவித்தல் என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால்  அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயன்முறை என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். 


சுதந்திரமானவனாக இரு. 
எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. 
நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்துகால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்  வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத் தான் இருக்கும். மக்கள் எவராயினும் சகிப்புத்தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும். நீ கடவுளைத்தேடி எங்கும்போகவேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க் கூடாது? பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப் பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் தத்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

1 comment:

  1. very nice//By:P.Thangaraja(S/O R.Piramuthu ,Thengamputhoor) swamy saranam Iyyappa.......

    ReplyDelete